- இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- நகர பஞ்சாயத்து சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.
இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
நகர பஞ்சாயத்து சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நகர பஞ்சாயத்து சார்பில் 18 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது
.
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இந்த சுதந்திர தினத்தை அமுதப் பெருவிழாவாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இன்று முதல் நாளை மறுநாள் வரை அனைவரும் தங்கள் வீடுகளில் மற்றும் பொது இடங்களில் தேசியக் கொடியில் பறக்க விடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது .
வள்ளியூரில் 18 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் கொடி ஏற்றுவதற்காக சுமார் 10,000 தேசியக்கொடிகளை பொதுமக்களுக்கு அரசு பஞ்சாயத்து சார்பில் வழங்கப்பட்டது.
நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நகர பஞ்சாயத்து தலைவி ராதா ராதாகிருஷ்ணன் தேசிய கொடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் டேனியல் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும், உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Image source: maalaimalar.com