- நெல்லை மாவட்டம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
- இந்த குறைதீர்க்க கூட்டத்தில் தங்களுடைய குறைபாடுகளை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் சனிக்கிழமை அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆகஸ்ட் மாத பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தம்முடைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
13-8-2022 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கின்றது.
குறைதீர் கூட்டத்தில் முகவரி மாற்றம் ,புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்வோர், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், அட்டை கோருதல் ,பெயர் நீக்குதல் , குடும்ப அட்டை முகவரி மாற்றம், , கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், அத்தியாவசிய பொருட்களின் தரம் போன்ற அனைத்துக்கும் புகார் அளிக்க விரும்புபவர்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் .
புதிய அட்டை பெற விரும்புவோர் குறைதீர்க்க கூட்டத்தில் விண்ணப்பம் செய்யவும். பிறப்பு இறப்பு சான்று, ஆதார் அட்டை , கைபேசி , குடியிருப்புச் சான்று ஆகியவற்றை எடுத்து வர வேண்டும. புகார்களுக்கு கட்டுப்பாட்டு அறை 9342471314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.