செய்தி குறிப்புகள்
- டி. ஜி. பி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி . பி.கே.ரவி நேற்று நெல்லைக்கு வந்தார்.
- ராதாபுரம் மானூரில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என டிஜிபி .பி. கே ரவி அறிவித்தார்.
திருநெல்லை மாவட்டம் நெல்லையை தலையிடமாகக் கொண்டு தீயணைப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி பி. கே ரவி கூறினார்.
டி. ஜி. பி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி . பி.கே.ரவி நேற்று நெல்லைக்கு வந்தார்.
அங்கே மருதகுளத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தீயணைப்பு தற்காலிக பயிற்சி மையத்திற்கு சென்றார் . அங்கு பயிற்சி பெற்று வரும் 145 வீரர்களை சந்தித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் வசதிகள் குறித்தும் பார்வையிட்டார
தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகம் முன்பு மரக்கன்று நாட்டினார் . மேலும் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அப்போது தென் மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் விஜயகுமார் , உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கணேசன் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் ஆகியோ கலந்து கொண்டனர்
டி.ஜி. பி .பி கே ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொழுது பேசியதாவது;
தமிழகம் முழுவதும் ஒன்பது இடங்களில் தீயணைப்பு துறை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 1600 புதிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி வருகிற ஆறாம் தேதி முடிவடைகிறது. பயிற்சி அளிப்பதற்கு சிறந்த மையமாக நெல்லை உள்ளது. தற்போது பயிற்சி நிறைவடைந்த உடன் அவர்கள் காலி பணியிடங்களை நிரப்பப்படுவார்கள்.
புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் அமைய உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மானூர் மற்றும் ராதாபுரம் ஆகிய இடங்களில் தீயமைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று டி.ஜி.பி. பி.கே ரவி கூறினார்.