செய்தி குறிப்புகள்
- நெல்லையில் மேயர் சரவணன் தலைமையில் நகர அமைப்பு நிலை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது .
- அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் மேயர் பி. எம். சரவணன் தலைமையில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு நிலை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு பி. எம் . சரவணன் பேசியதாவது;
நெல்லை மாநகர பகுதிக்கு உட்பட்ட ஆஸ்பத்திரிகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்தால் அந்த கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சிக்குட்பட்ட இடங்களை கண்டறிந்து அங்கே அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், பொது இடங்களை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
கழிவுநீர் ஓடைகளில் மழைநீர் எங்கும் சேர்ந்து நிற்காமல் சீராக போகும் வகையில் கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன்வந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மாநகர சட்ட பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி சாலை விரிவுபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பி.எம் சரவணன் கூறினார்.
துணை மேயர் கே . ஆர். ராஜு தலைமை வகிக்க , நகரமைப்பு நிலை குழு உறுப்பினர்கள் மற்றும் நகரமைப்பு நிலை குழு தலைவர் சங்கீதா ,மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, வெங்கட்ராமன் ,இளநிலை உதவி செயற்பொறியாளர் ராமசாமி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.