திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் காவல்நிலையத்துக்கு சிறந்த காவல்நிலையத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாநிலத்தின் சிறந்த காவல்நிலையங்களாக 41 காவல்நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது. அவற்றுள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் காவல்நிலையமும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள், முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு.தில்லை நாகராஜன் அவர்களிடம் சிறந்த காவல்நிலையத்துக்கான விருதை வழங்கியதுடன், முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.