திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசித் திருவிழாவின் மூன்றாம் திருநாளான நேற்று இரவு குமரவிடங்கப்பெருமான் - தங்கமுத்து ஆட்டுக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மை - வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தனர். அப்போது தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர் எதிர் சேவை கண்டருள, குமரவிடங்கருக்கும் - ஜெயந்திநாதருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.