செய்திக்குறிப்புகள்:
- நெல்லையில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பாளையங்கோட்டை திறப்பு விழாவில் அறிவிப்பு
நெல்லையில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க போவதாக துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தெரிவித்தார் .
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் சாலை வாகன போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதற்கான போக்குவரத்து போலீஸ் திட்டம் அமைக்கப்பட்டது
இதனுடைய திறப்பு விழா மற்றும் ஹெல்மெட் முக கவசம் அணிவது குறித்த நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் கலந்துகொண்டு முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பற்றி பேசினார்.
மோட்டார் சைக்கிளில் முக கவசம் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பான அல்வா வழங்கி பாராட்டு தெரிவித்தார் .
போக்குவரத்து போலீஸ் பூத் மையத்தை துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், ஏட்டு கௌரியிடம் பூஜை ரிப்பன் வெட்டி திறக்க செய்து, துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது
நெல்லை மாவட்ட மாநகரப் பகுதிகளில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் . ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லுதல் போன்ற போக்குவரத்து வழக்குகள் தினசரி 1200 முதல் 1500 வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள் , நம்பர் பிளேட் இல்லாமல் ஓடும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டுவது, மூன்று பேர் பயணிப்பதும் பறிமுதல் செய்யப்படும். விதிமுறைகளை மீறி வேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அனைவரும் விழிப்புணர்வோடு இருங்கள் என்று கூறினார்.
இன்ஸ்பெக்டர் பேச்சு முத்து,உதவி போலீஸ் கமிஷனர் முத்தரசர் , சப் இன்ஸ்பெக்டர் பாண்டி , கருத்துப் பாண்டியன் ராபர்ட் டென்சிங் உள்பட பலர் கலந்து இந்த போக்குவரத்து திறப்பில் கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com