பாளையங்கோட்டை - மகாராஜநகர் உழவர் சந்தையில் பொங்கலுக்கு பின்னர் நேற்று காய்கறிகள் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த சில நாட்களாக விலை உச்சத்தை தொட்ட தக்காளி மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ
தக்காளி - 20, நாட்டு கத்தரிக்காய் - 36, பச்சை கத்தரிக்காய் - 30, நீல கத்தரிக்காய்- 24, வெண்டைக்காய் - 20, புடலங்காய் - 20, சுரைக்காய் - 10, பீர்க்கங்காய் - 30, பூசணிக்காய் - 38, தடியங்காய்- 15, அவரைக்காய் - 36, மிளகாய்- 70, பல்லாரி - 36, உள்ளி - 60, காராமணி - 36, தேங்காய் - 32, இஞ்சி- 24, முள்ளங்கி- 14, உருளைக்கிழங்கு முதல் ரகம் - 22, உருளைக்கிழங்கு பழையது - 16, கேரட் - 70, சவ்சவ் - 10, முட்டைகோஸ் - 44, பீட்ரூட்- 35 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.