மனுஷன வெட்டுனாக் கூட கேள்வி கேட்காத இந்த சமூகத்துல “மரத்தை வெட்டுனா நான் கண்டிப்பா கேள்வி கேட்பேன்”னு சொல்றவர் தான் பியுஷ் மனுஷ்.கனிம கொள்ளையைத் தடுக்க, அதற்கு எதிராக போராடுபவர்கள் தான் பியுஷ் மற்றும் அவரது குழுவினர்.
பிறப்பால் இராஜஸ்தானியாக இருந்தாலும், தமிழனை திரும்பி பார்க்க வைத்தவர், தன்னுடைய உண்மையான பெயரான பியுஷ் சேத்தியா என்பதை பியுஷ் மனுஷ் என மாத்தி இருக்கார். இவரோட பெயர்ல வர்ற மனுஷ் என்பதற்கு ஜாதியையோ மதத்தையோ சாராத மனிதன்னு அர்த்தமாம்.
இவர் செய்த பல விஷயங்கள் மட்டுமில்ல, இவர் பெயர் கூட அறியப்படாத ஒருவர். தருமபுரியை சுற்றியுள்ள நீர் நிலைகளையும், ஏரிகளையும் தத்தெடுத்து சுத்தம் பண்ணிட்டு வர்றார். கிட்டத்தட்ட 150 ஏக்கர் நிலங்களை வறட்சி மாவட்டமான தருமபுரியில் நண்பர்களின் துணையுடன் வாங்கி 1 லட்சம் மரங்களையும், 20 நீர் நிலைகளையும் உருவாக்கியிருக்கிறார். இவர் உண்டாக்கிய இந்த கூட்டுறவு காட்டில் இயற்கை சார்ந்த தொழில்கள் செய்ய விரும்பினால் செய்யும் வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்.
இயற்கைக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுக்கும் இவரின் மிக முக்கிய குறிக்கோள்கள்,
1. நீர் நிலைகளை உருவாக்குதல் ( creating water)
2. வனங்கள் உருவாக்குதல் (creating oasis)
3. இயற்கையை மேம்படுத்துதல் (creating nature paradise)
4. மனித வளாங்களை உறிங்சும் பெரு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் (Activism)
5. இயற்கை வளங்களைப் பேணுதல் (conservation)
6. நிரந்தமான வளர்ச்சி ( sustainable development)
இவைகள் சமூகம் நலம் பெற இவரும் அவருடைய குழுக்களும் நம்மிடம் வைக்கும் வேண்டுகோள்கள்.
“ நியாயத்திற்கு போராட்டமும், இயற்கையில் உண்ணாவிரதமும்” என்று சொல்லும் இவர் சமூக ஆர்வலர் மட்டுமில்லாமல் நம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை துணைவன் என்றும் சொல்லலாம்.
இவரை கைது செய்ய பல காரணங்கள் மறைமுகமாக வைக்கப்பட்டாலும் தன்னைப் போல் அனைத்தையும் நேசிக்கும் இவர் ஒரு அபூர்வமானவர் தான்.