நெல்லை மாவட்டம் கொக்கிர குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த விழாவில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ஜொசிற்றாள் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் அனைத்து குழந்தைகள் நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும் உத்தரவை ஏற்று மருத்துவர் ரஞ்சித் குமார் தலைமையில் கொக்கிரகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பான முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்திரமாலா, கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
Image source: babycenter.in