- தூத்துக்குடி மாவட்டம் சிவ கலையில் மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
- முதுமக்கள் தாழிகளை திறந்து 200க்கும் மேற்பட்டபொருட்களை குறித்து ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ள சிவ கலையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது . புதன்கிழமை முதுமக்கள் தாழிகளை திறந்து பொருட்களை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கியது .
குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அவர்கள் கோரிக்கை விடுத்தார் . சிவகலை பரம்பு பகுதிகளில் அகழாய்வு பணி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கோரிக்கையில் தெரிவித்திருந்தார்.
அதன்படி 2020 ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வு பணி மற்றும் 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும் நடைபெற்றது. 3 ஆம் கட்ட அகழாய்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. 29 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி தொடங்கப்பட்டது .
சிவகளை பரம்பூர், ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்கள் புதையிடை பகுதியாகவும் பொட்டல் கோட்டை பராக்கிரமபாண்டி திரடு ஆகியவை வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன.
பாசிமணிகள், வளையல்கள், எழும்பாலான கூர்முனை கருவிகள், பட்ட சில்லுகள், சக்கரம், புகைப்படங்கள், காதணிகள் என 200க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வு பணியில் கண்டறியப்பட்டுள்ளன. 34 முதுமக்கள் தாழிகளைத் திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை அன்று தொடங்கியது.
சிவகலை அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் , மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன், ஆகியோர் தலைமையில் குழுவினர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Image source: tamiloneindia.com