செய்திக்குறிப்புகள்:
அரசு அருங்காட்சியகம் சார்பில் மகளிர் தின போட்டிகள்.
போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம் பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளதாக மாவட்ட காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.
இதில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பாளையங்கோட்டை அருங்காட்சியக வளாகத்தில் வைத்து பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் புதுக்கவிதை போட்டி, கோலப்போட்டி, பாரதியார் பாடல்களை பாடும் போட்டி,மெஹந்தி போட்டி, பெண்ணின் கடமை என்ற தலைப்பில் பேச்சு போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. இதில் பங்குகொண்டு வெற்றிபெறும் முதல் மூவருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.