- கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகளவில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
- மொத்தம் உள்ள 979 வார்டுகளில் 513 ல் பெண்கள் வெற்றி பெற்று சாதனை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கும் கடந்த 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 979 வார்டு கவுன்சிலர் பதிவுகளுக்கு மொத்தம் 4,366 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் மாவட்டத்தில் ஆண்களை பின்னுக்குத்தள்ளி மொத்தம் உள்ள 979 வார்டுகளில் 513 இடங்களில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் பெண்கள் 27 இடங்களிலும், கொல்லங்கோடு நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் பெண்கள் 18 இடங்களிலும், தலா 21 வார்டுகளை கொண்ட குழித்துறை மற்றும் பத்மநாபபுரம் ஆகிய இரண்டு நகராட்சிகளில் பெண்கள் தலா 12 இடங்களிலும், 24 வார்டுகளைக் கொண்ட குளச்சல் நகராட்சியில் பெண்கள் 12 இடங்களிலும், 51 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 828 வார்டுகளில் பெண்கள் 413 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.