செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி மாவட்டம் தெற்கு ரயில்வே தரப்பு சார்பில் அறிக்கை அறிவித்திருந்தது.
- அதன்படி திருநெல்வேலியிலிருந்து தாம்பரம் வாராந்திரிய அதிவேக சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து தாம்பரம் வாராந்திரிய அதிவேக சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட பயணிகளின் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக இயக்கப்பட்டு வந்த கோடைகால வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் அதிவிரைவு ரயில் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் வாராந்திரிய அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (06004) ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 7 மணிக்கு புறப்படும். சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் கீழக்கரை பாவூர்சத்திரம் தென்காசி வழியாக தாம்பரத்திற்கு திங்கட்கிழமை அன்று காலை 9 மணிக்கு வந்தடையும்.
அதுபோலவே மீண்டும் தாம்பரம் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில், ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10. 20 மணிக்கு புறப்படும். மதுரை, தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி மீண்டும் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வாராந்திரிய சிறப்பு அதி விரைவு ரயில் திருநெல்வேலி தாம்பரம் இடையே தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Image source: indianrailinfo.com