தேசிய அளவில் 112 முன்னேறத்துடிக்கும் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பினால் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர்வள ஆதாரங்கள், நிதி சேவைகள் மற்றும் திறன் மேம்பாடு, சாலை வசதி, குடிநீர் வசதி, தனிநபர் இல்ல கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு உள்ளிட்ட 49 காரணிகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தேசிய அளவில் 112 மாவட்டங்களில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் இரண்டாவது இடத்தை விருதுநகர் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் இது முன்னேறிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.