இந்திய மருத்துவக் கவுன்சில் நேற்று முதல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அறிவுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் நேற்று முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கபட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் நேற்று முதல் முறையாக முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் நேற்று அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து, வகுப்புகளுக்கு வந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மேகநாத ரெட்டி அவர்கள் இலவச பாட புத்தகங்களையும், உபகரணங்களையும் வழங்கி உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் திரு.சங்குமணி உட்பட பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.