விருதுநகர் சந்தையில் 100 கிலோ மூடை உளுந்து ரூ.200 குறைந்து விற்பனை ஆனது. இதனால் முழு உளுந்து ரூ.8100 முதல் ரூ.9300 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.7300 முதல் ரூ.9800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10100 முதல் ரூ.11100 வரையிலும் விற்பனை ஆனது. இது தவிர துவரை 100 கிலோ மூடை ரூ.100 விலை அதிகரித்து ரூ.6400 முதல் ரூ.7700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10700 முதல் ரூ.11600 வரையிலும், மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 4400 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.3400 முதல் ரூ.3500 வரையிலும், குண்டு வத்தல் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.1000 உயர்ந்து ரூ.17 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ. 7000 முதல் ரூ.10500 வரையும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.