விருதுநகர் மாவட்ட அரசு பள்ளியில் பயின்ற 13 மாணவ - மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 324 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஐஸ்வர்ய லட்சுமி, மெட்டுகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 231 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அபிநய லட்சுமி, தும்முசின்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 212 மதிப்பெண்கள் மாணவி மாதவி, சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 219 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சக்தி பவித்ரா, விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 213 மதிப்பெண்கள் பெற்ற மாணவி கற்பகலட்சுமி, எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 332 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் கண்ணன், அதே பள்ளியில் பயின்று 342 மதிப்பெண்கள் பெற்ற மாணவி பேபிசர்மிளா, பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 219 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அகல்விழி, ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 290 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஐஸ்வர்யா, ராஜபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 262 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சுந்தரேஸ்வரன், காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 227 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் முத்துராஜா, மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 364 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சாலைமுத்து, சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 335 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஜெயகிருஷ்ணா ஆகியோர்கள் மருத்துவக்கல்வி பயில்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.