அருகம்புல் மாலை விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது ஏன்! என்பதற்கு மிக அழகான ஒரு தத்துவத்தை பற்றி பார்ப்போமா!
எமனுடைய மகன் அனலாசுரனுக்கு ஏன் இந்த ஆணவம்! அதனால் தேவர்கள் படும் துன்பங்கள்தான் எத்தனை ! இதைப் பார்த்த கணபதிக்கு வந்தது கோபம். புறப்பட்டு விட்டார் போருக்கு...
அவனை அழிப்பதற்காக தன்னுடைய பூதகணங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு அனலாசுரனை நோக்கி விநாயகப் பெருமான் சென்று போர் புரிகின்றார்.
அனலாசுரனோ தன்னுடைய அனல் எனும் தீயினால் பூதகணங்கள் அனைவரையும் அழித்து விடுகின்றான்
அதனால் விநாயகர் கோபம் கொண்டு அனலாசுரனை விழுங்கிவிட ... ஆனால் அவனது அனலின் வெப்பத்தை தாங்க முடியாமல் விநாயகப்பெருமான் சற்றே அல்லல் படுகிறார்.
கங்கை நீரை குடம் குடமாக கொண்டுவந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அனல் சிறிதும் குறையவில்லை. கடைசியாக ஒரு முனிவர் அருகம்புல்லை விநாயகரின் தலையில் உடல் குளிர்ந்தது உள்ளம் குளிர்ந்தது உவகை பெருக முனிவரை போற்றுகிறார்.
வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரக்கூடிய மகத்துவம் வாய்ந்து அறுகம்புல்லின் சிறப்பை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக...
'எம்மை பக்தியோடு வேண்டுவோர் அருகம்புல் மாலையை எனக்கு சாத்தி வழிபட்டால் - வெப்பம் எனும் துன்பத்தை நீக்கி குளிர்ச்சியான இன்பகரமான வாழ்க்கையை யான் கொடுத்து அருள் புரிவேன்' என கூறி அருள் பாலிக்கின்றார். இதுதான் அறுகம்புல் வழிபாட்டிற்கான ஐதீக வரலாறு.