தென்காசி மாவட்டம்., பாவூர்ச்சத்திரத்தில் உள்ள வென்னிமலை முருகன் திருக்கோவிலில் மாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து திருக்கோவில் சேர்ந்தவுடன், மூலவருக்கு உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 8.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முருகப்பெருமான் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.