செய்திக் குறிப்புகள்
- நெல்லை மாவட்டம் அக்டோபர் மாதத்தில் வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை சபாநாயகர் அப்பாவு தகவல்
- மேல்மட்டபாலம் ஆறு வழி சாலை திட்டமிடப்பட்டு 17 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு பணிகள் தொடங்கப்பட்டது
நெல்லை மாவட்டம் வெள்ள நீர் கால்வாயில் அக்டோபரில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்
தாமிரபரணி ஆற்றில் வெள்ள காலங்களில் கடலில் மிதக்கும் 13 மில்லியன் கன அடி உபரிநீரை , நாங்குநேரி, ராதாபுரம் , திசையன்விளை , சாத்தான்குளம் உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். தாமிரபரணி ஆறு நம்பியாறு மற்றும் கருமேனியாறு ஆகியவற்றை இணைத்து நதிநீர் இணைப்புத் திட்டத்தை அதாவது வெள்ளநீர் கால்வாய் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
ரூ 369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது முதலமைச்சராக மு க ஸ்டாலின் இந்தத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே மூன்று நிலைகளில் பணிகள் முடிக்கப்பட்டு 4 வந்து நிலை பணிகள் நடந்து வருகிறது
பொன்னாங் குடி அருகில் நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நதிநீர் இணைப்பு திட்டம் குறுக்கே மேல்மட்டபாலம் ஆறு வழி சாலை திட்டமிடப்பட்டு 17 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு பணிகள் தொடங்கப்பட்டது .
இந்த பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்வையிட்ட சபாநாயகர் அப்பாவு விரைந்து முடிக்க உத்தரவிட்டார் . அதன் பிறகு அந்த பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பாலம் கட்டும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் விவசாய மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விவசாய மக்களின் கவலையை தீர்க்கும் பொருட்டு….வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் அதில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிக முயற்சி எடுத்து வருகிறார்.