செய்திக் குறிப்புகள்
- வள்ளியரில் கண்ண நல்லூர் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்
- காலி குடங்களுடன் காமராஜர் சிலை அருகே போராட்டம் செய்த மக்கள், அரசு பேருந்தை சிறைப்பிடிப்பு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பனைக்குளம் கிராமங்களில் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிதண்ணீர் சரியாக வினியோகம் செய்யாததால் மக்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகினர்.
இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வள்ளியூர் ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என கிராம மக்கள் சேர்ந்து முடிவெடுத்து காலி குடங்களுடன் கண்ணநல்லூர் காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து வந்த வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன், காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும், தனிப்பிரிவு காவலர் மகாராஜன் ஆகியோர் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்கு நம்பிக்கை இல்லாத, கிராம மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதனை அடுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனகிருபா பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க.. இதையடுத்து அதிகாரிகள் குடிநீர் வழங்க உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
Image source: tamil.getlokalapp.com