திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா மிகவும் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளியூரில் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் வருடம் தோறும ஆவணி மாதம் நடக்கும் தேரோட்ட திருவிழா அனைத்து முக்கிய திருவிழாக்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி இந்த வருடமும் வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி மாத தேரோட்டத் திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் ஆராதனை தீபாராதனை சிறப்பு பூஜைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்தனர். 11 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவில் வருகிற ஏழாம் தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவிலில் நிர்வாகத்தினர் பெருமாள் குழுவினர்கள் பக்தர்கள் குழு மற்றும் மண்டக படிதாரர்கள் செய்து வருகின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி மாத தேரோட்டம் திருவிழாவை அனைவரும் தரிசித்து வாழ்க்கையில் வளம் காணுங்கள்.
Image source: dailydhanthi.com