செய்தி சுருக்கம்
- வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் தலைமையில் ரூ 87 இலட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
- யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பள்ளிகளுக்கு ரூ 87 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும். மாணவர்களின் அறிவை மேம்படுத்தி அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக அமைவது பள்ளிக்கூடம். அதை ஆக்கப்படுத்தும் விதமாக ரூபாய் 87 லட்சம் செலவில்…
- அடங்கார்குளம் பஞ்சாயத்து சவுந்தரலிங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் மற்றும் கழிவறை கட்டுவதற்கு பூமி பூஜை
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 20 ரூபாய் லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
- பண்ருட்டி அருகே பாம்பன் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 17 லட்சம் பேர் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும் நடைபெற்றது.
யூனியன் ஆணையாளர் நடராஜன் தலைமை தாங்க, வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பணகுடி நகர பஞ்சாயத்து தலைவர் தனலக்ஷ்மி , துணைத் தலைவர் புஷ்பராஜ் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து தலைவர் கட்டித் தங்கம் மணி வர்ண பெருமாள், முன்னாள் தலைவர் மணிவண்ணன் பெருமாள், சவுந்திர லிங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வசந்தா முருகேசன் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் , சாந்தி ஒன்றிய கவுன்சிலர்கள் மல்லிகா, அஜந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு உலக அறிவு, வியாபாரம் ,வர்த்தகம், தொழிற் புரட்சி , வேலைவாய்ப்பு என பெரிய விழிப்புணர்வை கொடுக்கக்கூடியது கல்வி . அதை கற்பிக்கும் பள்ளிகளுக்கு, ரூ 87 லட்சம் அரசு கொடுக்கும் இந்த முன்னேற்ற பணிக்கு திருநெல்வேலி டுடே மகிழ்ச்சி தெரிவிக்கின்றது.