முருகப்பெருமான் வைகாசி விசாகத்தில் பிறந்ததற்கு மிக அழகான காரணமுண்டு .
இறைவனுடைய கருணை அறக்கருணை , மறக்கருணை என இருவகைப்படும்.
ஒரு பாவமும் செய்யாது
நல்ல மனம் படைத்தவர்களை தூய்மையான குணம் கொண்டவர்களை இறைவன் தம் அறகருணையால் ஆட்கொள்கின்றான்.
ஆணவம் கொண்டவன்
ஒருபொழுதும் இறைவனை காண முடியாது ..ஆணவத்தை ஒடுக்குபவன் இறைவன் ஒருவனே . அதனால்தான் ஆணவம் கொண்ட சூரனை
தம்முடைய வேலாயுதத்தால் ஆட்கொண்டு உடலினை இரு கூறாக்கி
ஒரு கூறு மயிலாகவும் , மற்றொன்று சேவலாகவும் மாற்றி தம்மோடு சேர்த்து
காட்சி தருகின்றான். முருகபெருமான் செய்த இந்த செயல் மறக்கருணை என்பதாகும்.
சூரசம்ஹாரம் தத்துவத்தை எடுத்துக்காட்டவே எம்பெருமான் அவதாரம் எடுக்கிறார். அவதாரம் எடுத்த தினம் நேற்றைய தினம் என்பதால் அனைத்து முருகன் கோவில்களிலும் மிகப்பெரிய விழாவாக வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், பாளையஞ்சாலை குமார சுவாமி கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் சிறப்பான ஹோம பூஜைகள் ,கண்களுக்கு குளிர்ச்சி தரும் தீபாராதனை , மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் சங்காபிஷேகம் மற்றும் யாகம் நடக்க ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூஜையில் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டது. அதேபோல வைகாசி வைசாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து கிரிவலப்பாதை ஊர்வலமாக வருவது என வள்ளியூர் முருகன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் தீபாராதனை பூஜை சிறப்பாக நடந்தது.
வைகாசி விசாக விழா மற்றும் வருஷாபிஷேக விழா பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சேரன்மாதேவி பிரதான சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் நடைபெற்றது
5 மணிக்கு விழாவையொட்டி நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் உற்சவர் உலா அனைத்தும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
வீரநல்லூர் அருகே அத்தாளநல்லூரிலிருந்து திருப்புடைமருதூர் செல்லும் வழியில் விசாக கட்டளை மடம் இணைந்த பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் சிறப்பு தீபாராதனை மற்றும் திருவீதி உலா நடைபெற்றது தொடர்ந்து அன்னதானம் நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்து ஒன்று சுவாமி தரிசனம் செய்தனர்.