செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
- தினமும் காலை மாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு
சிவன் இடத்தில் சிந்தைதனை நிறுத்த வேண்டும் . அவன் பார்வை நம் மீது படவேண்டும் . பாவ கணக்கு கரைந்து புண்ணிய பலன்கள் யாவும் நாம் பெற வேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்!
வாழ்வில் 'ஓம் நமச்சிவாயா ' எனும் நாமம் தனை நாம் மொழிந்து , புண்ணியங்கள் கூடி சீரும் சிறப்புமாய் வாழ்வதற்கு நம்மால் முடிந்த பல திருத்தலங்கள் சென்று திருப்பணிகள் செய்து சிவ தரிசனம் காண வேண்டும். அப்படிப்பட்ட சிறப்பான திருத்தலம்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோவில்.
கைலாசபுரத்தில் தாமிரபரணி கரையோரம் கைலாச நாதர் திருக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டும் திருவிழாவையொட்டி திங்கட்கிழமை காலையில் சுவாமி அம்பாளுக்கு மங்களம் தரும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன .
அதன் பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீபாரதனை நடத்த பெற்றது. நமச்சிவாயா எனும் முழக்கத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
விழா நாளில் தினமும் காலை மாலை சிறப்பு வழிபாடுகள் திருவீதி உலா குறித்த விவரங்கள்!
ஜூன் 2 ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா
5ஆம் தேதி - நடராஜர் சிவப்பு சாத்தி வெள்ளை சாத்தி சப்பர புறப்பாடு
ஜூன் 7ஆம் தேதி காலை தேரோட்டம்
ஜூன் 8ஆம் தேதி - கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா என கோவில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.