மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் ஒரு முறை தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சிறப்பு கால அவகாசம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ள விரும்பும் பதிவுதாரர்கள் வரும் 27.08.2021 தேதிக்குள் தங்கள் பதிவினை இணையதளம் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இணையதளம் மூலம் புதுப்பிக்க முடியாதவர்கள் மேலே குறிப்பிட்ட தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையதளம் மூலமாக தங்கள் பதிவை புதுப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வரும் 27.08.2021 தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.