திருநெல்வேலி மாவட்டத்தில் 12 - 14 வயதிற்குட்பட்ட சிறுவர் - சிறுமியர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி நேற்று முதல் "கோர்பவேக்ஸ்" தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது.
திருநெல்வேலி சந்திப்பு - மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இந்த தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. அப்துல்வகாப் அவர்கள் துவக்கி வைத்தார்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 48 ஆயிரத்து 400 சிறுவர் சிறுமியர் இந்த தடுப்பூசி போடுவதற்கு தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து இந்த தடுப்பூசிகளை மாணவர்களுக்கு செலுத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாரத்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதுகுறித்து மாநகர நல அலுவலர் மருத்துவர் திரு.ராஜேந்திரன் அவர்கள், அரசு உத்தரவுபடி சிறுவர் - சிறுமியர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி செலுத்தி முடிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Image source: maalaimalar.com