- கொரோனா பரவல் தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்.
- திருநெல்வேலி மாவட்டத்தில் 515 இடங்களில் நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நேற்று 515 இடங்களில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் இதுவரை 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 63 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முகாம்கள் மூலம் எஞ்சியுள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும், இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியும் நடைபெற்றது.
இதன் மூலம் திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: maalaimalar.com