- திருநெல்வேலி மாநகரில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டது.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணுசந்திரன் அவர்கள் உத்தரவின்படியும், மாநகர நல அலுவலர் திரு.ராஜேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர பகுதியில் மொத்தம் 74 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் மூலம் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இரண்டு தவணை முடிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுதவிர திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களிலும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
Image source: maalaimalar.com