Logo of Tirunelveli Today

உயர் கல்விக்கான நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் விஷ்ணு தகவல்

June 30, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக் குறிப்புகள்

  • பாளையங்கோட்டையில் உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என கலெக்டர் விஷ்ணு அறிவிப்பு.
  • நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரியக்குளம் சாரதா மகளிர் கல்லூரியில் நடக்கிறது.

பாளையங்கோட்டையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரியக்குளம் சாரதா மகளிர் கல்லூரியில்
உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்தார்.

உயர்கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்க …அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்த பேசுகிறார் .

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பொறியியல், மருத்துவம் ,வணிகவியல் , கலை மற்றும் அறிவியல் போன்ற உயர்கல்வி படிப்புகள் மற்றும் அதனை சார்ந்த வேலை வாய்ப்புகள் சம்பந்தமாகவும் மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கல்லூரி கனவை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு பள்ளி மாணவ மாணவியருக்கு உதவும் வகையில் தமிழக முதல் அமைச்சரின் " நான் முதல்வன் " என்ற திட்டத்தின் கீழ் , "கல்லூரி கனவு" என்ற தலைப்பில் உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாக இந்நிகழ்ச்சி அமையும்.

இதில் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் நெல்லை கலெக்டரின் யூட்யூப் சேனலில் கண்டு பயன் பெறலாம் என்று கலெக்டரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Image source: thenpothigainews

செய்தி ஆசிரியர்

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify