செய்திக்குறிப்புகள்:
உலக வன உயிரின தின விழா.
விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் சார்பாக களக்காட்டில் உலக வன உயிரின தின விழா நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சரவணன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து, விழிப்புணர்வு நடை பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நடை பயணத்தில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், தன்னார்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு வனத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடியே சென்றனர். நிகழ்ச்சியின் முடிவில் வனவிலங்குகளையும், வன வளங்களையும் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வன ஆர்வலர்கள் உரையாற்றினார்கள்.