செய்திக்குறிப்புகள்:
- நெல்லையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம்
- நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்
திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2020 பிரிவு 101-ன் படி, “திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கவும், அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற உதவும் வகையிலும், சம்பந்தப்பட்ட அரசு திருநங்கைகள் நல வாரியத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்”.
திருநங்கைகளின் நலனுக்காக விரிவான மறுவாழ்வுக்கான துணைத் திட்டங்கள் உட்பட “SMILE - Support for Marginalized Individuals for Livelihood and Enterprise”, என்ற திட்டங்கள் என திருநங்கைகளுக்காக அரசு பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அது மட்டும் இல்லாது, இப்பொழுது புதிய முயற்சி ஆக திருநங்கைகளுக்கு பயனளிக்கும் வகையில் கலெக்டர் விஷ்ணு தகவல் ஒன்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முதன்முறையாக நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி உரையாற்றினார் அப்பொழுது அவர் பேசியதாவது…
நெல்லையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டத்தில் திருநங்கைகள் கலந்து கொண்டு பேசினர்.
நரசிங்கநல்லூர் திருநங்கைகள் குடியிருப்புக்கு சாலை குடிநீர் வசதி, பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா பொருத்துதல் என கோரிக்கைகளை திருமங்கைகள் முன் வைத்தனர்.
வள்ளியூரில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட 36 பட்டாக்களிலும் வீடுகள் கட்டி தர ஏற்பாடு மற்றும் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்தல்,
ஊர்க்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் என மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர் .
கூட்டத்தில் 96 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், ஒருவருக்கு தையல் இயந்திரம், குரூப்- 4 பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.
Image source: dailythanthi.com