தூத்துக்குடி மாநகராட்சியில் வரும் 19/02/2022 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற இருக்கும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நேற்று துவங்கி வைத்தார்.இதில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள சுமார் 1500 தேர்தல் பணியாளர்களுக்கு வாக்கு இயந்திரங்களை கையாளுவது, இயக்குவது, வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பது மற்றும் பிற தேர்தல் பணிகள் குறித்து புரஜெக்டர்கள் மூலம் விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று தொடங்கியுள்ள இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம்18-ம் தேதி வரை சுழற்சி முறையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.