- திருநெல்வேலி விக்ரமசிங்கபுரம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.
- தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் விக்ரமசிங்கபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி , மேற்கு தொடர்ச்சி மலையில் ஒட்டிய புகழ்பெற்ற இடம் ஆகும்.
அந்த அகஸ்தியர் அருவியில் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு குளித்தும் மகிழ்ந்தனர்.
இந்த வருடம் முழுவதும் தண்ணீர் நிலை அதிகரித்து அதிகமாய் அருவி தண்ணீர் கொட்டுகின்றது. அப்படி அருவி கொட்டுவதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்கள் , வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுப்பயணிகள் அந்த இடத்தை சுற்றுலா தலமாக வந்து கண்டு களித்து குடும்பத்தினரோடு சேர்ந்து குளித்து மகிழ்கிறார்கள்
விடுமுறை நாள் நேற்று என்பதால் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து அதிகமாக இருந்தது. .
பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் அனைத்து வாகனமும் வனத்துறையினரால் சோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டது. வாழ்க்கையில் மகிழ்ச்சியை கண்டு களிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தில் வருகை புரிந்து மகிழ்ந்தனர்.
Image source: dailythanthi.com