கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காவல்துறையினரால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களான மாத்தூர் தொட்டிப்பாலம், கன்னியாகுமரி கடற்கரை, திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, திற்பரப்பு அருவி மற்றும் படகு குழாம் ஆகிய இடங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.