திருநெல்வேலி மாநகரில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான சைவ உணவுகள் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் மூலம் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகர எல்லைக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, பெருமாள்புரம், கட்டபொம்மன் நகர், சாந்தி நகர், வண்ணாரபேட்டை, திருநெல்வேலி சந்திப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த இலவச உணவு சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச உணவு பெற விரும்புவோர் 9698927868 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.