திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் வருடம் தோறும் தை அமாவாசையை ஒட்டி பத்திர தீப விழா விமரிசையாக நடைபெறும். இது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை லட்ச தீப விழாவாக நடைபெறும் என்பது சிறப்பம்சம். இந்த ஆண்டுக்கான பத்திர தீப விழா நாளை 29/01/2022 துவங்க உள்ள நிலையில், வரும் 30/01/2022 ஆம் தேதி மாலை 6.43 மணிக்கு மேல் 7.43 மணிக்குள் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வரும் 31/01/2022 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மேல் தங்க விளக்கில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு மகா நந்தி தீபமும், திருக்கோவில் வளாகம் முழுவதும் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றும் விழாவும், தொடர்ந்து இரவில் விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனத்திலும், ஆறுமுகநயினார் - தங்கச்சப்பரத்திலும், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனத்திலும், காந்திமதி அம்மை - வெள்ளி இடப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் - சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்வும் நடைபெற உள்ளது.