திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு வருடம்தோறும் நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
இந்த ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும் காலங்களில் எழுந்தருள்வதற்காக மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பீமன் திருமேனி இங்கு உள்ளது. இந்த பிரம்மாண்ட திருமேனியை ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டுமே திருக்கோவில் ரத வீதிகளில் நாம் தரிசிக்க முடியும் என்பது சிறப்பம்சம் ஆகும்.