தமிழகத்தில் தற்போது பெருகி வரும் கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசாங்கம் ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு பாதுகாப்பு பணிகள் செய்து வரும் முன் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் சார்பாக அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரான்சிஸ் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.முருகேசன் அவர்கள் பங்கு கொண்டு, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்த சுமார் 100 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.