Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க "வணக்கம் நெல்லை 24/7" வாட்ஸ்-அப் எண் அறிமுகம்!

June 30, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள், நேற்று  "வணக்கம் நெல்லை" 97865 66111 என்ற புதிய வாட்ஸ்-அப் எண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.

பொது மக்கள் இந்த எண்ணில் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் புகார்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். இந்த வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்படும் குறைகள் மற்றும் புகார்கள் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மூலம் அந்தந்த துறைக்கு உடனடியாக அனுப்பப்படும். இதற்காக முக்கிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify