திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை 24/06/2021 அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருநெல்வேலி நகர்ப்புற செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாளை 24/06/2021 வியாழக்கிழமை, தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அவசர கால பராமரிப்பு பணிகள் காரணமாக தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவன்யூ, சங்கரன்கோவில் ரோடு பகுதி, தெற்கு பாலபாக்கியா நகர், வடக்கு பாலபாக்கியா நகர், இருதயநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், மணிமூர்த்தீஸ்வரம், சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளில் காலை மணி முதல் மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.