Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகரில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த ஆட்சித் தலைவர் உத்தரவு...!

May 6, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா நோய் தீவிரமாக பரவி வரும் இன்றைய காலக்கட்டத்தில், அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில், மேலும் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதால் கூடுதல் நடவடிக்கையாக இன்று முதல் பல்வேறு தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று முதல் பகல் 12.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்குரிய கடைகளான காய்கறி, பலசரக்கு மற்றும் தேநீர் கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்படுவது மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு, விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify