நெல்லை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக திரு. விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சிக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஆணையாளாராக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் கேரளாவை பூர்வீகமாக கொண்ட 2015 ஆம் ஆண்டின் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.
இவர் 2019 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராகவும், துணை ஆட்சியராகவும் பணியாற்றி, பின்னர் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையாளர் மற்றும் கூடுதல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியும் கேரளாவை பூர்விகமாக கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதும், அவர் தற்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளராக பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். புதிய மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் விரைவில் பதவியேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.