- கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி திருவிழா இன்று துவக்கம்.
- வரும் 06/03/2022 அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில். இங்கு ஒரே இடத்தில் மூலவர் கரியமாணிக்க பெருமாளை நின்ற கோலத்திலும், அனந்த பத்மனாபரை கிடந்த கோலத்திலும், லட்சுமி நாராயணரை அமர்ந்த கோலத்திலும் தரிசிக்கலாம். இத்தகைய சிறப்புகள் பெற்ற இந்த கோவிலின் பங்குனி திருவிழா இன்று (28/03/2022) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதனையொட்டி இன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெற உள்ளது.
இந்த விழாவின் ஐந்தாம் திருநாளான வரும் 01/03/2022 அன்று இரவில் கருட சேவையும், பத்தாம் திருநாளான வரும் 06/03/2022 அன்று காலை தேரோட்டமும் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
கரியமாணிக்க பெருமாள் கோவிலின் வரலாற்றை கீழ்காணும் இணைப்பில் காணலாம். https://www.tirunelveli.today/ta/tirunelveli-nagaram-sri-kariyamanikka-perumal-thirukovil/