திருநெல்வேலி மாநராட்சியில் உள்ள கண்டியப்பேரியில் ரூ.28 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கண்டியபேரியில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.28 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. 5329.54 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. 3 தளங்களுடன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்படுகிறது. இங்கு அவசரகால தாய் சேய் பிரிவு, பொது மருத்துவ பிரிவு (பெண்கள்), பொது மருத்துவ பிரிவு (ஆண்கள்) கட்டப்பட உள்ளது. இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை (மருத்துவப்பணிகள்) செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் அருள் நிதிசெல்வன், நெல்லை வட்டாட்சியர் பகவதிபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.