திருநெல்வேலி அரசு அருங்காட்சியம் மற்றும் பொதிகை தமிழ் சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டியை நடத்த உள்ளது. வரும் 21/02/2022 அன்று கொண்டாடப்படவுள்ள தாய் மொழி தின விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த கவிதை போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் பங்குபெறலாம். போட்டியில் பங்கு பெரும் மாணவர்கள் "யாதும் தமிழே" என்ற தலைப்பில் 24 வரிகளுக்குள் கவிதை எழுதி வரும் 15/02/2022 ஆம் தேதிக்குள் மாவட்ட காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 3000, இரண்டாம் பரிசாக 2000, மூன்றாம் பரிசாக 1000 ரொக்கப்பணமும், சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட காப்பாட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.