திருநெல்வேலி அருகிலுள்ள ஐந்து சிவாலயங்கள் பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முற்காலத்தில் தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, சிவபெருமான் அம்பெய்தி உடைத்தார். அந்த அமுதம் பூலோகத்தில் பல்வேறு இடங்களில் சிதறி ஐந்து குரோசம் தூரம் வரையில் பரவி ஐந்து ஸ்தலங்களை உண்டாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும். ஆக ஐந்து குரோச தூரத்தில் அமையப்பெற்றுள்ள கோவில்கள் என்பதால் இந்த ஐந்து சிவாலயங்களும் "பஞ்ச குரோச ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுவதாகவும், இந்த பஞ்ச குரோச ஸ்தலங்கள் காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலம் என்ற சிறப்பை பெறுவதாகவும் கூறப்படுகிறது.
பஞ்ச குரோச ஸ்தலங்கள்:
1. சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ சிவசைலநாதர் திருக்கோவில்.
2. ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ வன்னியப்பர் திருக்கோவில்.
3. கடையம் ஸ்ரீ நித்யகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ வில்வவனநாதர் திருக்கோவில்.
4. திருப்புடைமருதூர் ஸ்ரீ கோமதி அம்மை உடனுறை ஸ்ரீ நாறும்பூநாதர் திருக்கோவில்.
5. பாபநாசம் ஸ்ரீ உலகாம்பிகை உடனுறை ஸ்ரீ பாபநாசநாதர் திருக்கோவில்.