திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே கலை பண்பாட்டு மையம் இணைந்து வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று பல்வேறு கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை வகுப்புகள் மற்றும் முகாம்களை நடத்தி வருகிறது.
இந்த வாரம் வியாழக்கிழமையான நேற்று பழைய தண்ணீர் கேனில் இருந்து அழகிய கலையம்சம் கொண்ட ஜாடிகள் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி அவர்கள் துவக்கி வைக்க, ஈ.வெ.ரா அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்கள். இதில் பல்வேறு இடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் ஆர்வமாக பங்கு பெற்றார்கள்.