தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று அதிகாலை 5.00 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விசுவரூப தரிசனம், 6.00 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம், 6.30 மணிக்கு உதயமார்தாண்ட தீபாராதனை, முற்பகல் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மூலவர் விமானத்துக்கு கும்ப நீர் அபிஷேகம், 11.30 மணிக்கு மேல் உச்சி கால அபிஷேகம், 12.00 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 5.00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, அதனை தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் வீதி உலா, மாலை 6 .45 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு ஏகாந்த சேவை, 8.00 மணிக்கு பள்ளியறை பூஜை, 8.15 மணிக்கு திருக்கோவில் நடைசாத்துதல் நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாரத்தில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் பக்தர்களுக்கு வழிபாட்டு தலங்கள் செல்ல அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ள காரணத்தால், இன்று பக்தர்கள் பங்கேற்பின்றி வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.